/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வாரச்சந்தை தேதி மாற்றம் தண்டோரா மூலம் அறிவிப்பு
/
வாரச்சந்தை தேதி மாற்றம் தண்டோரா மூலம் அறிவிப்பு
ADDED : ஆக 25, 2025 03:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்: ப.வேலுார், சுல்தான்பேட்டை வாரச்சந்தை, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கூடுகிறது. வரும், 31ல், ஞாயிற்றுக்கிழமை அன்று, ப.வேலுாரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு தொடங்கி, முக்கிய வீதிகள்
வழியாக வந்து சுல்தான்பேட்டை சந்தைரோடு வழியாக காவிரி ஆற்றுக்கு செல்கிறது.
அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், சுல்தான்பேட்டை வாரச்சந்தை, வரும், 29ல் நடைபெறும் என, ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து மற்றும் ஏலம் குத்தகைதாரர்கள் மூலம் தண்டோரா போட்டு மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் நேற்று தகவல் தெரிவித்தனர்.