/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வங்கி தேர்வில் முதலிடம் பிடித்த ராசிபுரம் மாணவருக்கு வரவேற்பு
/
வங்கி தேர்வில் முதலிடம் பிடித்த ராசிபுரம் மாணவருக்கு வரவேற்பு
வங்கி தேர்வில் முதலிடம் பிடித்த ராசிபுரம் மாணவருக்கு வரவேற்பு
வங்கி தேர்வில் முதலிடம் பிடித்த ராசிபுரம் மாணவருக்கு வரவேற்பு
ADDED : ஜன 20, 2025 07:00 AM
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த வெங்கடாசலம் மகன் வல்லரசு, 24; இவரது தந்தை இறந்துவிட்டார். தாய் -மேகலா தான் கூலி வேலைக்கு சென்று, வல்லரசை படிக்க வைத்தார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், சிங்களாந்தபுரம் அரசு பள்ளியில் முதலிடம் பிடித்தார். தொடர்ந்து பி.எஸ்சி., அக்ரி முடித்த வல்லரசு, போட்டி தேர்வுக்கு பயிற்சிபெற தொடங்கினார். கடந்த, 2024ல் மண்டல கிராம வங்கிக்கான ஆர்.ஆர்.பி., தேர்வு நடந்தது. இதற்கான தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது.
இதில், வல்லரசு, 100க்கு, 72.8 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். சாதனை படைத்த வல்லரசு, நேற்று சொந்த ஊருக்கு திரும்பினார். போடிநாயக்கன்பட்டி கிராம மக்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.