/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் 1,646 பேருக்கு ரூ.9.31 கோடியில் நல உதவி
/
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் 1,646 பேருக்கு ரூ.9.31 கோடியில் நல உதவி
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் 1,646 பேருக்கு ரூ.9.31 கோடியில் நல உதவி
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் 1,646 பேருக்கு ரூ.9.31 கோடியில் நல உதவி
ADDED : பிப் 17, 2024 12:56 PM
நாமக்கல்: 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாமில் தேர்வு செய்யப்பட்ட, 1,646 பயனாளிகளுக்கு, 9.31 கோடி ரூபாய் மதிப்பில், எம்.பி., ராஜேஸ்குமார் நலத்திட்ட உதவி வழங்கினார்.'மக்களுடன் முதல்வர்' திட்ட பயனாளிகளுக்கு நல உதவி வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நாமக்கல்லில் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.பி., ராஜேஸ்குமார், 1,646 பயனாளிகளுக்கு, 9.31 கோடி ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்டம், 2023 டிச., 18ல் துவங்கி, 9 நாட்கள் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின், நாமக்கல் மாவட்டத்தில், 12,895 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, 704 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு வருவாய் கோட்டத்தில், இதுவரை, 4,382 பேருக்கு, 18.41 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும், அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்தி, தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நாமக்கல், ராசிபுரம் நகராட்சி தலைவர்கள் கலாநிதி, கவிதா, டி.ஆர்.ஓ., சுமன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, ஆர்.டி.ஓ.,க்கள் சரவணன், சுகந்தி, தனித்துணை கலெக்டர் பிரபாகரன், அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, வகுரம்பட்டி பஞ்., மகரிஷி நகரில் சாலைப்பணி, என்.புதுப்பட்டி, திண்டமங்கலம் மற்றும் பொட்டணம் பஞ்.,ல், துணை சுகாதார நிலையம் அமைக்கும் பணி, பொட்டணம் பஞ்., மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, புதுச்சத்திரம் ஒன்றியம், ஏ.கே.சமுத்திரத்தில், சாலைப்பணி என, மொத்தம், 1.80 கோடி ரூபாய் மதிப்பில், புதிய திட்டப்பணிகளுக்கு, எம்.பி., ராஜேஸ்குமார் அடிக்கல் நாட்டினார்.