/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இ.பி.எஸ்., பிறந்த நாளையொட்டி 1,000 பேருக்கு நலத்திட்ட உதவி
/
இ.பி.எஸ்., பிறந்த நாளையொட்டி 1,000 பேருக்கு நலத்திட்ட உதவி
இ.பி.எஸ்., பிறந்த நாளையொட்டி 1,000 பேருக்கு நலத்திட்ட உதவி
இ.பி.எஸ்., பிறந்த நாளையொட்டி 1,000 பேருக்கு நலத்திட்ட உதவி
ADDED : மே 13, 2025 02:17 AM
சேந்தமங்கலம் :சேந்தமங்கலம் தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் சந்திரசேகரன். இவர், சில தினங்களுக்கு முன், முன்னாள் அமைச்சர் தங்கமணி, பரமத்தி வேலுார் எம்.எல்.ஏ., சேகர் முன்னிலையில், முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான இ.பி.எஸ்.,சை சந்தித்து, தன்னை உறுப்பினராக இணைத்துக்கொண்டார். அதை தொடர்ந்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் தினமும் முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரசேகரனை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இ.பி.எஸ்., பிறந்த நாளையொட்டி, கொல்லிமலை அடிவாரம், தேவனுார்நாடு, வளப்பூர்நாடு, வாழவந்தி நாடு பேன்ற மலை கிராமங்களில் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த கூலி தொழிலாளர்கள், 1,000ம் பேருக்கு இலவச வேட்டி, சேலை, சில்வர் குடம், தட்டு உள்ளிட்டவை வழங்கினார். இதை பெற்றுக்கொண்ட பெண்கள், இ.பி.எஸ்., நலமுடன் வாழ வாழ்த்தினர்.
அப்போது, நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., இளைஞரணி செயலாளர் இளங்கோ, சிவக்குமார், காளப்பநாய்க்கன்பட்டி டவுன் பஞ்., செயலாளர் ராஜா, சேந்தமங்கலம் முன்னாள் பேரூர் செயலாளர் ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஸ்ரீபாலன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.