/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புத்தக திருவிழாவில் 43 பேருக்கு ரூ.1.40 கோடியில் நலத்திட்டம் வழங்கல்: அமைச்சர், எம்.பி.,க்கள் பங்கேற்பு
/
புத்தக திருவிழாவில் 43 பேருக்கு ரூ.1.40 கோடியில் நலத்திட்டம் வழங்கல்: அமைச்சர், எம்.பி.,க்கள் பங்கேற்பு
புத்தக திருவிழாவில் 43 பேருக்கு ரூ.1.40 கோடியில் நலத்திட்டம் வழங்கல்: அமைச்சர், எம்.பி.,க்கள் பங்கேற்பு
புத்தக திருவிழாவில் 43 பேருக்கு ரூ.1.40 கோடியில் நலத்திட்டம் வழங்கல்: அமைச்சர், எம்.பி.,க்கள் பங்கேற்பு
ADDED : பிப் 10, 2025 07:21 AM
நாமக்கல்: புத்தக திருவிழாவில், 43 பேருக்கு, 1.40 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை, தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
நாமக்கல் மாநகராட்சியில், 3ம் ஆண்டு புத்தக திருவிழா, கடந்த, 1ல் தொடங்கி நடந்து வருகிறது. 9ம் நாளான நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு, டி.ஆர்.ஓ., சுமன் தலைமை வகித்தார். எம்.பி.,க்கள் திருச்சி சிவா, ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், 43 பயனாளிகளுக்கு, 1.40 கோடி ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதி, திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில், அவர்களுக்கு 'திருநங்கை' என்ற பெயரை சூட்டி பெருமை சேர்ந்தார். மேலும், திருநங்கைகளுக்கு அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றினார். தமிழக முதல்வர் ஸ்டாலின், திருநங்கைகளுக்கு பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகிறார். மேலும், திருநங்கைகளுக்கு உரிமைகளையும், விடுதலையையும் பெற்றுத்தர வேண்டும் என, முனைப்புடன் லோக்சபாவில் உழைத்தவர் எம்.பி., திருச்சி சிவா. புத்தகங்கள் படிப்பதை அனைவரும் தொடர்ந்து பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, பல்வேறு துறைகள் சார்பில் தேர்வு செய்யப்பட்ட, 43 பேருக்கு, 1.40 கோடி ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில், திருநங்கை ஒருவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், ஆட்டோ வாங்குதற்கு மானியம் வழங்கப்பட்டது. முன்னதாக, மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்த இயற்கை காய்கறிகளை பார்வையிட்ட அமைச்சர் மதிவேந்தன், விற்பனையை தொடங்கி வைத்தார். மாநகராட்சி துணை மேயர் பூபதி, மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, தனித்துணை கலெக்டர் பிரபாகரன், அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

