/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வீட்டு சுவரை இடித்தபோது கூரை விழுந்து வாலிபர் சாவு
/
வீட்டு சுவரை இடித்தபோது கூரை விழுந்து வாலிபர் சாவு
வீட்டு சுவரை இடித்தபோது கூரை விழுந்து வாலிபர் சாவு
வீட்டு சுவரை இடித்தபோது கூரை விழுந்து வாலிபர் சாவு
ADDED : நவ 08, 2024 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை:நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்த தொ.ஜேடர்பாளையம் மேற்கு தெருவை சேர்ந்தவர் சரவணன், 28, திருமணமாகி, மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. லட்சுமணன் என்பவரிடம், கட்டட வேலை செய்து வந்தார்.
அதே பகுதியில் ஞானவேல் என்பவரின் பழைய தொகுப்பு வீட்டை இடித்து விட்டு, புதிய வீடு கட்டும் பணி நடக்கிறது. அந்த வீட்டை இடிக்கும் பணியில் சரவணன் நேற்று காலை ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக சுவர், கூரை இடிந்து சரவணன் மீது விழுந்தது. அவரை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் இறந்தது தெரிந்தது. நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.