/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அத்திப்பலகானுாரில் சாட்டையடி திருவிழா
/
அத்திப்பலகானுாரில் சாட்டையடி திருவிழா
ADDED : நவ 06, 2024 07:03 AM
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, அத்திப்பலகானுாரில் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த மாதம், 24ல் பூச்சாட்டுதல், கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று காலை, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் பூவோடு எடுத்து கோவிலை சுற்றி வந்தனர். பின், பக்தர்களுக்கு சாட்டையடி வழங்கும் நிகழ்ச்சி கோவில் அருகே நடந்தது.
அப்போது, கோவில் பூசாரிகள், பக்தர்கள் மீது சாட்டையால் அடித்தனர். வேண்டுதலை நிறைவேற்ற நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சாட்டையடி வாங்கினர். சிலர் தங்களின் கைக்குழந்தைகளுடன் நின்று சாட்டையடி வாங்கினர். இந்த விநோத நிகழ்ச்சியை பார்க்க, அத்திப்பலகானுார், கட்டனாச்சம்பட்டி, ராசிபுரத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக வந்திருந்தனர். நாளை வண்டி வேடிக்கை, எருதாட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. 9ல் மஞ்சள் நீராடுதலுடன் விழா முடிவடைகிறது.