ADDED : ஏப் 24, 2025 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்:
குமாரபாளையம், நாராயண நகரை சேர்ந்தவர் வடிவேல், 33; இவரது மனைவி பூமிகா, 25; தம்பதிக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மாலை முதல் மனைவி பூமிகாவை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், குமாரபாளையம் போலீசில், காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தருமாறு புகாரளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.