/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மனவளக்கலை மன்றத்தில் மனைவி நல வேட்பு விழா
/
மனவளக்கலை மன்றத்தில் மனைவி நல வேட்பு விழா
ADDED : செப் 02, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள அறிவு திருக்கோவில் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில், நேற்று முன்தினம் இரவு, மனைவி நல வேட்பு விழா நடந்தது. அறக்கட்டளை தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
மனவளக்கலை முதுநிலை பேராசிரியர் மாணிக்கவாசகம் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், நுாற்றுக்கும் மேற்பட்ட தம்பதியர், நேருக்கு நேராக அமர வைக்கப்பட்டு, காந்த பரிமாற்ற தவம் நடந்தது.
தொடர்ந்து, கணவன், மனைவிக்கு பூ கொடுப்பதும், மனைவி, கணவனுக்கு பழம் கொடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

