ADDED : ஜூன் 10, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, அருவங்காடு பகுதியை சேர்ந்தவர் பிரியா, 20; கூலித்
தொழிலாளி. இவரது கணவர் செல்வராஜ், 29, கொத்தனார். இந்நிலையில் செல்வராஜ் அடிக்கடி குடித்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதேபோல், நேற்று முன்தினம் இரவு செல்வராஜ் குடித்துவிட்டு வந்துள்ளார். இதனால் கோபித்துக்கொண்ட பிரியா, நேற்று அதிகாலை, 3:30 மணியிலிருந்து காணவில்லை. உறவினர் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த செல்வராஜ் கொடுத்த புகார்படி, குமாரபாளையம் போலீசார், காணாமல் போன பிரியாவை தேடி வருகின்றனர்.