/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வன உயிரின பாதுகாப்பு போட்டி நேஷனல் பப்ளிக் பள்ளி சாதனை
/
வன உயிரின பாதுகாப்பு போட்டி நேஷனல் பப்ளிக் பள்ளி சாதனை
வன உயிரின பாதுகாப்பு போட்டி நேஷனல் பப்ளிக் பள்ளி சாதனை
வன உயிரின பாதுகாப்பு போட்டி நேஷனல் பப்ளிக் பள்ளி சாதனை
ADDED : நவ 16, 2024 01:27 AM
வன உயிரின பாதுகாப்பு போட்டி
நேஷனல் பப்ளிக் பள்ளி சாதனை
நாமக்கல், நவ. 16--
வன உயிரின பாதுகாப்பு வார விழாவையொட்டி, வனத்துறை சார்பில் மாவட்ட அளவில், பள்ளி மாணவ, மாணவியருக்கான ஓவியம், கட்டுரை, பேச்சு, வினாடி - -வினா போட்டி, நாமக்கல்லில் நடந்தது.
இதில், 50க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதில், நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவ, மாணவியர் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
ஓவிய போட்டியில், 3, பேச்சு போட்டி, 2, வினாடி--வினாவில், 2 என, மொத்தம், 7 பரிசுகளை வென்றனர். நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவ, மாணவியருக்கு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., ராஜேஸ்குமார், கலெக்டர் உமா, மாவட்ட வன அலுவலர் கலாநிதி ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.
இந்த மாணவர்களை, நேஷனல் பப்ளிக் பள்ளி தலைவர் சரவணன், முதல்வர் ராஜா சுந்தரவேல், மேல்நிலைப்பள்ளி முதல்வர் விக்டர் பிரேம்குமார், ஆசிரியர்கள் பாராட்டினர்.