/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கப்படுமா
/
ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கப்படுமா
ADDED : அக் 17, 2025 01:37 AM
மல்லசமுத்திரம், ராமாபுரம் வாரச்சந்தையில், ஒழுங்கு முறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மல்லசமுத்திரம் யூனியன், ராமாபுரம் கிராமத்தில் வாரம்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடந்து வருகிறது. இதில் மாந்தோப்பு காலனி, வண்டிநத்தம், கொசவம்பாளையம், பரமசிவ கவுண்டம்பாளையம், 4ரோடு, அவினாசிப்பட்டி, மேட்டுபாளையம், கருமனுார் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகளை விற்பனை செய்தும், பொதுமக்கள் காய்கறிகளை வாங்கியும் பயனடைந்து வருகின்றனர்.
இதுவரை, ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதுவும் இங்கு அமைக்கப்படவில்லை. மாறாக, தரையில் படுதாக்களை விரித்து அதில் வியாபாரம் செய்துவருகின்றனர். தற்சமயம், மழைக்காலம் என்பதால் மழைநீர் உள்ளே புகுந்து காய்கறிகளை நாசம் செய்து விடுகிறது. எனவே, ஒழுங்குமுறை விற்பனைகூடம் அமைக்க வேண்டும் என, இப்பகுதி வியாபாரிகள், மக்கள் எதிர்பார்க்கின்றனர்.