/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலை சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா
/
கொல்லிமலை சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா
ADDED : ஜூலை 15, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம், நாமக்கல்லில் இருந்து வரும் மக்கள், சேந்தமங்கலம் வழியாக ராமநாதபுரம் புதுார் மற்றும் வெண்டாங்கி வழியாக கொல்லிமலை அடிவார பகுதியான காரவள்ளி சென்று, அங்கிருந்து மலையேற தொடங்குகின்றனர்.
வெண்டாங்கியை அடுத்துள்ள மிகப்பெரிய ஆபத்தான வளைவில், வாகன ஓட்டிகள் மிகவும் வேகமாக வாகனத்தை இயக்கி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க, வேகத்தடை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.