/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெப்படையில் வடமாநில தொழிலாளர் அதிகரிப்பு விபரங்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
/
வெப்படையில் வடமாநில தொழிலாளர் அதிகரிப்பு விபரங்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
வெப்படையில் வடமாநில தொழிலாளர் அதிகரிப்பு விபரங்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
வெப்படையில் வடமாநில தொழிலாளர் அதிகரிப்பு விபரங்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
ADDED : ஏப் 27, 2025 04:31 AM
பள்ளிப்பாளையம்: வெப்படை பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், குற்ற செயல்களை தடுக்க அவர்களை பற்-றிய விபரங்களை சேகரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட நுாற்பாலைகள் செயல்படுகின்-றன. இவற்றில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணி-யாற்றி வருகின்றனர். அவர்கள், நுாற்பாலை வளாகத்திலும், வெளியிலும் அறை எடுத்து தங்கியுள்ளனர். வடமாநில தொழிலா-ளர்கள் அதிகரிப்பால், குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன.கடந்த, 18ல் வெப்டையில் கஞ்சா விற்பனை செய்த ஒடிசா வாலி-பரை போலீசார் கைது செய்து, ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
நேற்று முன்தினம், ஜார்க்கண்ட் மாநிலத்தில் சக்கரதாப்பூர் பகு-தியை சேர்ந்த துகிபோட்ரா, 21, என்ற பெண், ஒன்றரை வயது குழந்தையை கொலை செய்து விட்டு, வெப்படை பகுதிக்கு வந்து இங்குள்ள நுாற்பாலையில் வேலை செய்து வந்தார். தகவ-லறிந்து வந்த ஜார்க்கண்ட் போலீசார், அப்பெண்ணை கைது செய்து, அழைத்து சென்றனர்.
மேலும், வடமாநில தொழிலாளர்களால் குற்றச்செயல்கள் அதிக-ரித்து வருகின்றன. வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு சேர்க்கும் முன், போலீஸ் ஸ்டேஷனில் அவர்களை பற்றிய விப-ரங்களை, சம்பந்தப்பட்ட நுாற்பாலை நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறையை பல நுாற்பாலை நிறுவனங்கள் பின்பற்றுவது இல்லை. குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், வெப்படை பகுதியில் உள்ள வெளிமாநிலத்தவர்-களின் விபரங்களை சேகரிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, வெப்படை போலீசார் கூறியதாவது: வெப்படை பகுதியில் பணியாற்றி வரும், வடமாநில தொழிலாளர்களை பற்-றிய விபரங்களை சேகரித்து வைத்துள்ளோம். புதிதாக வரு-வோரின் விபரங்ளையும் தொடர்ந்து சேகரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

