/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சமுதாய கூடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு விடப்படுமா
/
சமுதாய கூடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு விடப்படுமா
சமுதாய கூடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு விடப்படுமா
சமுதாய கூடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு விடப்படுமா
ADDED : ஜூன் 30, 2025 04:40 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட கலியனுார் பஞ்சாயத்தில், ஆவத்திபாளையம் பகுதியில் சமுதாய கூடம் உள்ளது. இந்த சமுதாய கூடத்திற்கு மிகவும் குறைந்த கட்டணம் என்பதால், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இந்த சமுதாய கூடத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். இந்த சமுதாய கூடம், இப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது.
தற்போது, பராமரிப்பு இல்லாததால், சமுதாய கூடம் சேதமடைந்து, கடந்த, 10 ஆண்டுக்கு மேலாக பயன்பாடு இல்லாமல் காணப்படுகிறது. எனவே, கலியனுார் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இந்த சமுதாய கூடத்தை சீரமைத்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.