/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சேதமான போர்வெல் குழாய்விபத்துக்கு முன் அகற்றப்படுமா
/
சேதமான போர்வெல் குழாய்விபத்துக்கு முன் அகற்றப்படுமா
சேதமான போர்வெல் குழாய்விபத்துக்கு முன் அகற்றப்படுமா
சேதமான போர்வெல் குழாய்விபத்துக்கு முன் அகற்றப்படுமா
ADDED : ஏப் 26, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, வசந்த நகர் பகுதியில் சாலையோரம் போர்வெல் குழாய் இருந்தது. இது சேதமடைந்து, மூன்றாண்டுக்கு மேல் செயல்படாமல் உள்ளது. சேதமடைந்த போர்வெல் குழாய், தற்போது பாதியளவு மட்டுமே சாலையோரம் உள்ளது. இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனக்குறைவாக சென்றால், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
ஏராளமான வாகனங்கள் செல்லும் சாலை என்பதால், பயனில்லாத போர்வெல் குழாயை அகற்ற, பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.