/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எருமப்பட்டி போஸ்ட் ஆபீஸ் இ - சேவை மையம் தினமும் திறக்கப்படுமா?
/
எருமப்பட்டி போஸ்ட் ஆபீஸ் இ - சேவை மையம் தினமும் திறக்கப்படுமா?
எருமப்பட்டி போஸ்ட் ஆபீஸ் இ - சேவை மையம் தினமும் திறக்கப்படுமா?
எருமப்பட்டி போஸ்ட் ஆபீஸ் இ - சேவை மையம் தினமும் திறக்கப்படுமா?
ADDED : டிச 20, 2024 01:04 AM
எருமப்பட்டி போஸ்ட் ஆபீஸ் இ - சேவை மையம் தினமும் திறக்கப்படுமா?
எருமப்பட்டி, டிச. 20-
எருமப்பட்டி போஸ்ட் ஆபீஸில் உள்ள ஆதார் மையத்தை தினமும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
எருமப்பட்டி மற்றும் அதை சுற்றிலும், 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் ஆதார் கார்டில் பெயர் மாற்றம், திருத்தம், போன் எண் மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள, எருமப்பட்டி போஸ்ட் ஆபீஸில் உள்ள 'ஆதார் இ சேவை மையம்' செயல்பட்டு வருகிறது. இந்த மையம் வாரம் ஒரு நாள் மட்டும் திறக்கப்படுகிறது. திறந்திருக்கும் நாளில், 200க்கும் மேற்பட்டோர் ஆதார் கார்டில் பிழை திருத்துவதற்காக, அதிகாலை முதல் டோக்கன் வாங்க காத்திருக்கின்றனர். ஆனால், பணியாளர்கள், 10
டோக்கன்களுக்கு மட்டுமே பணி செய்து விட்டு அடுத்த வாரம் வரச்செல்லி திருப்பி அனுப்புகின்றனர். அதனால் நாமக்கல், சேந்தமங்கல் சென்று பிழை திருத்தம் செய்கின்றனர்.
இது குறித்து எருமப்பட்டி பகுதியினர் கூறுகையில், ' எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிக்கு போஸ்ட் ஆபீஸில் ஒரு மையம் மட்டுமே உள்ளது. இதுவும் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படுகிறது. இதனால், வயதான மூதாட்டிகள், முதியவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, எருமப்பட்டியில் ஆதார் இ - சேவை மையத்தை தினமும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.