/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் பயன்பாட்டிற்கு வருமா?
/
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் பயன்பாட்டிற்கு வருமா?
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் பயன்பாட்டிற்கு வருமா?
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் பயன்பாட்டிற்கு வருமா?
ADDED : மே 02, 2025 01:42 AM
பள்ளிப்பாளையம்:
பள்ளிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், வாகனங்கள் சீராக செல்லவும், கடந்த, 2021ல், ஆலாம்பாளையம் பகுதியில் இருந்து பள்ளிப்பாளையம் பிரிவு சாலை வழியாக ஒன்பதாம்படி பகுதி வரை, 3- கி.மீ., துாரத்திற்கு, 200- கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. மேம்பால பணி, 2024 மார்ச்சுக்குள் முடிவடையும் என, திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்டது, ஆனால், இடைப்பட்ட காலங்களில் பாலம் பணி வேகமின்றி, தொய்வு நிலையில் காணப்பட்டது. கடந்த, 3 மாதங்களுக்கு முன் பணிகள் முழுவதும் முடிவடைந்து, உயர்மட்ட மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
இதனால், பள்ளிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள், தொழிலாளர்கள் கல்லுாரி மாணவ, மாணவியர் பாதிக்கப்படுகின்றனர். ஈரோட்டில் இருந்து சென்னை, சேலம், நாமக்கல் ஆத்துார், ராசிபுரம், திருச்செங்கோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள், பள்ளிப்பாளையம் வழியாக தான் செல்ல வேண்டும். மேம்பாலம் திறக்கப்படாமல் உள்ளதால், அனைத்து வாகனங்களும் பாலத்தின் கீழ் சாலை வழியாக செல்வதால் வாகன நெரிசல் காரணமாக விபத்தும் ஏற்படுகிறது.
எனவே, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், மேம்பாலத்தை பயன்பட்டுக்கு கொண்டு வர, நாமக்கல் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.