/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெப்படை பிரிவு சாலையில் ரவுண்டானா அமைக்கப்படுமா?
/
வெப்படை பிரிவு சாலையில் ரவுண்டானா அமைக்கப்படுமா?
ADDED : ஏப் 29, 2024 07:26 AM
பள்ளிப்பாளையம் : வெப்படை பஸ் ஸ்டாப் பிரிவு சாலையில் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். அதனால், பிரிவு சாலையில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை பஸ் ஸ்டாப் பகுதியில் நான்கு சாலைகள் பிரிகின்றன. இந்த பிரிவு சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் தொடர்ந்து சென்ற வண்ணம் உள்ளன. பிரிவு சாலை திறந்தவெளியாக உள்ளதால், வேகமாகவும், தாறுமாறாகவும் வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக, இரவு நேரத்தில் டூவீலரில் செல்லும் வயதானவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். சில நேரம், பிரிவு சாலையை கடந்து செல்லவே வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர். அந்தளவுக்கு வேகமாக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் சாலையை கடந்து செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, பிரதான சாலை என்பதால், விபத்தை தடுக்கும் வகையில், இங்கு ரவுண்டானா அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

