கூலி உயர்வு பேச்சில் தீர்வு கிடைக்குமா? விசைத்தறி தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
கூலி உயர்வு பேச்சில் தீர்வு கிடைக்குமா? விசைத்தறி தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
ADDED : செப் 10, 2026 06:17 AM
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம்
பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்களுக்காக, இன்று நடக்கும் கூலி
உயர்வு பேச்சு வார்த்தையில் தீர்வு கிடைக்குமா? என, விசைத்தறி
தொழிலாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பள்ளிப்பாளையம்
சுற்றுவட்டாரத்தில் விசைத்தறி முக்கிய தொழிலாகும். இதில்,
20,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த
தொழிலாளர்களுக்கு கடைசியாக போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தம்,
கடந்த, 2025 மே மாதத்துடன் முடிந்துவிட்டது. ஒப்பந்தம் முடிந்து
ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம்
போடப்பட வில்லை.
இதையடுத்து, விசைத்தறி தொழிலாளர்களுக்கு புதிய
கூலி உயர்வு, 75 சதவீதம் உள்ளிட்ட, 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,
விசைத்தறி நிர்வாகங்களுக்கு, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர்
சங்கம் சார்பில், கடந்த, ஆறு மாதங்களுக்கு முன்பே கடிதம்
அனுப்பப்பட்டது. ஆனால், இன்னும் கூலி உயர்வு ஒப்பந்தம் குறித்து
பேச்சுவார்த்தைக்கு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர்
வரவில்லை.
இந்நிலையில், விசைத்தறி உரிமையாளர் சங்க
நிர்வாகங்கள், உடனடியாக கூலி உயர்வு கோரிக்கையை பேசி தீர்வு காண
வேண்டும். தொழிலாளர் துறையும், தமிழக அரசும் உடனடியாக தலையிட
வேண்டும் என, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில்
கோரிக்கை வைக்கப்பட்டது.
இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட விசைத்தறி
தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அசோகன் கூறுகையில்,
''பள்ளிப்பாளையம், குமாரபாளையம் பகுதி விசைத்தறி
தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு குறித்து பேச்சுவார்த்தை, இன்று மாலை,
3:00 மணிக்கு சேலம் தொழிலாளர் அலுவலகத்தில் அதிகாரிகள்
முன்னிலையில், கூலி உயர்வு குறித்து பேச்சு வார்த்தை நடக்கிறது,''
என்றார்.
