/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளிப்பாளையம் அருகே சமயசங்கிலியில் காற்று, மழையால் 50 ஏக்கர் வாழை சேதம்
/
பள்ளிப்பாளையம் அருகே சமயசங்கிலியில் காற்று, மழையால் 50 ஏக்கர் வாழை சேதம்
பள்ளிப்பாளையம் அருகே சமயசங்கிலியில் காற்று, மழையால் 50 ஏக்கர் வாழை சேதம்
பள்ளிப்பாளையம் அருகே சமயசங்கிலியில் காற்று, மழையால் 50 ஏக்கர் வாழை சேதம்
ADDED : அக் 22, 2024 01:04 AM
பள்ளிப்பாளையம் அருகே சமயசங்கிலியில்
காற்று, மழையால் 50 ஏக்கர் வாழை சேதம்
பள்ளிப்பாளையம், அக். 22-
சமயசங்கிலியில் வீசிய பலத்த காற்று, மழையால், 50 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் வாழை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே சமயசங்கிலியில் ஏராளமான விவசாயிகள் வாழை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில், கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமலும், வயலில் தண்ணீர் அதிகளவு தேங்கியதாலும், சமயசங்கிலி பகுதியில் சாகுபடி செய்திருந்த, 50க்கும் மேற்பட்ட ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.
இதுகுறித்து, வாழை சாகுபடி செய்த விவசாயி கூறியதாவது:
சமயசங்கிலி மற்றும் சுற்று வட்டார பகுதியில், 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இன்னும், மூன்று மாதங்களில் வாழைத்தார் அறுவடைக்கு வந்து விடும். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன், தொடர் மழை பெய்ததால், 50 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் ஒரு ஏக்கருக்கு, 6 லட்சம் ரூபாய் வரை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு, அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளிப்பாளையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுகன்யா மற்றும் அதிகாரிகள், வாழை மரங்கள் சேதம் குறித்து கணக்கெடுத்து
வருகின்றனர்.