ADDED : ஜூன் 12, 2026 04:44 AM

ராசிபுரம்:ராசிபுரம்
அடுத்த வடுகம் பகுதியில், நேற்று இரவு, 8:00 மணிக்கு பலத்த காற்றுடன் கன
மழை பெய்தது. இதில், வடுகம் பெரிய ஆலமரம் பஸ் ஸ்டாப் அருகே,
சாலையோரத்தில் இருந்த புங்கன் மரம் திடீரென முறிந்து சாலையின் குறுக்கே
விழுந்தது.
அப்போது மரத்தின் அடியில் யாரும் இல்லாததால், உயிர்ச்
சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், பிரதான சாலையின் குறுக்கே மரம்
விழுந்ததால், அந்த வழியாக சென்ற டூவீலர், கார், லாரிகள் என, அனைத்து
வாகனங்களும் செல்ல முடியாமல் ஸ்தம்பித்தன. இதனால் இருபுறமும் நீண்ட
வரிசையில் வாகனங்கள் காத்திருந்ததால் போக்குவரத்து முழுமையாக
பாதிக்கப்பட்டது. தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும்
இளைஞர்கள், சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். பின், பொக்லைன்
இயந்திரம் வரவழைக்கப்பட்டு சாலையின் குறுக்கே கிடந்த மரத்தை
அப்புறப்படுத்தும் பணி நடந்தது.
ஒரு மணி நேர போராட்டத்திற்கு
பின், மரம் முழுமையாக வெட்டி அகற்றப்பட்டது. அதை தொடர்ந்து
போக்குவரத்துச் சீரமைக்கப்பட்டு வாகனங்கள் வழக்கம்போல்
இயக்கப்பட்டன. இதேபோல், நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி டவுன் பஞ்.,
மற்றும் புதுப்பட்டி உள்ளிட்ட இடங்களிலும், நேற்று இரவு பலத்த
காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
