/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இரண்டு மாதங்களுக்கு காற்றின் வேகம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்
/
இரண்டு மாதங்களுக்கு காற்றின் வேகம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்
இரண்டு மாதங்களுக்கு காற்றின் வேகம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்
இரண்டு மாதங்களுக்கு காற்றின் வேகம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்
ADDED : ஜூலை 16, 2025 01:34 AM
நாமக்கல், 'இன்னும், இரண்டு மாதங்களுக்கு அதிக காற்று வீசும் வானிலை நிலவும்' நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தின், கடந்த வார வானிலையில் பகல், இரவு நேர வெப்ப அளவுகள் முறையே, 98.6 டிகிரி பாரன்ஹீட் மற்றும் 75.2 பாரன்ஹீட்டாக நிலவியது. மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழை பதிவாகி உள்ளது. அடுத்த, ஐந்து நாட்களுக்கு வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடனும், சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். பகல் வெப்பம், 93.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும், இரவு வெப்பம், 71.6 டிகிரி பாரன்ஹீட்டாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் மேற்கிலிருந்து மணிக்கு, 12- கி.மீ., முதல் 16 கி.மீ., என்றளவில் வீசக்கூடும்.
காற்றின் வேகம் தொடர்ந்து அதிகமாக காணப்படுவதால், கோழிப்பண்ணைகளில் தீவனம் வீணடிக்கப்படாமல் பாதுகாத்துக்கொள்ளும் வியூகங்களில் பண்ணையாளர்கள் ஈடுபட வேண்டும். இன்னும், இரண்டு மாதங்களுக்கு அதிக காற்று வீசும் வானிலை நிலவும். தீவன விரயத்தை தடுக்க, தீவனத்தில் சிறிதளவு தாவர எண்ணெயை சேர்க்கலாம். இதனால் மதிப்புள்ள வைட்டமின் போன்றவை, காற்றில் பறந்து செல்வதை தடுக்க முடியும். மேலும், உயர்மனைகளின் பக்கவாட்டில் படுதாவை கட்ட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

