ADDED : அக் 29, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார், ப.வேலுார் அருகே, பாண்டமங்கலம் கொளக்காட்டு புதுாரை சேர்ந்தவர் குழந்தைசாமி, 45; இவரது மனைவி ராசாத்தி, 40; இவர், நேற்று முன்தினம் அரசு டவுன் பஸ்சில், ப.வேலுாருக்கு சென்றார்.
ப.வேலுார் பஸ் ஸ்டாண்டில் இறங்கி பார்த்தபோது கைப்பையில் வைத்திருந்த மொபைல் போன் மற்றும் 3,200 ரூபாய் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து புகார்படி, பஸ் ஸ்டாண்டில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த ஒரு பெண்ணிடம், பரமத்தி போலீசார் விசாரித்தனர்.
அதில், மதுரை மாவட்டம், வண்டிப்புதுாரை சேர்ந்த ஐயப்பன் மனைவி விமலா, 36, என்பதும், டவுன் பஸ்சில் பயணம் செய்தபோது மொபைல் போன், பணத்தை திருடியது தெரியவந்தது. விமலாவை கைது செய்த போலீசார், சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

