/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கந்துவட்டி கொடுமையை தடுக்கக்கோரி கலெக்டர் ஆபீசில் பெண் தீக்குளிக்க முயற்சி
/
கந்துவட்டி கொடுமையை தடுக்கக்கோரி கலெக்டர் ஆபீசில் பெண் தீக்குளிக்க முயற்சி
கந்துவட்டி கொடுமையை தடுக்கக்கோரி கலெக்டர் ஆபீசில் பெண் தீக்குளிக்க முயற்சி
கந்துவட்டி கொடுமையை தடுக்கக்கோரி கலெக்டர் ஆபீசில் பெண் தீக்குளிக்க முயற்சி
ADDED : ஜூலை 03, 2025 01:23 AM
நாமக்கல், நாமக்கல் அடுத்த வேட்டாம்பாடியை சேர்ந்தவர் ஜிலானி, 42; இவர், சேந்தமங்கலத்தை சேர்ந்த நபரிடம் கந்துவட்டிக்கு, ஆறு லட்சம் ரூபாய் கடன் வாங்கி, இதுவரை, 13 லட்சம் ரூபாய் கட்டியுள்ளார். இதற்காக, பாண்டு பேப்பரில் கையெழுத்து போட்டுள்ளார். அசல், வட்டி கட்டி முடித்த பின்பும், இன்னும் பணம் கட்ட வேண்டும் எனக்கூறி வற்புறுத்தியதால், 2022ல் நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார். ஆனால், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதற்கிடையில், வீட்டின் மீது நீதிமன்றத்தில், 'பாண்டு கேஸ்' போடப்பட்டுள்ளது. இதையடுத்து, 14.51 லட்சம் ரூபாய் தரவேண்டும் எனக்கூறியதால், மன உளைச்சலுக்கு ஆளானார்.
இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் முடித்து, எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன், கலெக்டர் துர்காமூர்த்தி ஆகியோர், போர்டிகோவில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு
வந்தனர்.
அப்போது, அங்கு வந்து காத்திருந்த ஜிலானி, திடீரென தன்னிடம் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்து மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் அலுவலர்கள் உடனடியாக, தண்ணீர் ஊற்றி அவரை தடுத்தனர்.
தொடர்ந்து, கலெக்டர் துர்கா மூர்த்தி, ஜிலானியிடம் விசாரணை
நடத்தினார். அவரிடம் இருந்து மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், மனு மீது
உடனடியாக நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.