/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பஸ்சில் பயணி தவறவிட்ட ரூ.30,000 எடுத்துச்சென்ற பெண்ணுக்கு வலை
/
பஸ்சில் பயணி தவறவிட்ட ரூ.30,000 எடுத்துச்சென்ற பெண்ணுக்கு வலை
பஸ்சில் பயணி தவறவிட்ட ரூ.30,000 எடுத்துச்சென்ற பெண்ணுக்கு வலை
பஸ்சில் பயணி தவறவிட்ட ரூ.30,000 எடுத்துச்சென்ற பெண்ணுக்கு வலை
ADDED : ஜூலை 07, 2025 03:51 AM
கெங்கவல்லி: நாமக்கல் மாவட்டம் மெட்டாலாவை சேர்ந்தவர் வேல்முருகன், 32. இவர், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி.,யிடம், கார் டிரைவராக பணி-புரிகிறார்.
சொந்த ஊர் செல்ல, கடந்த ஜூன், 24 இரவு, 9:00 மணிக்கு, ராசி-புரத்தில் இருந்து தம்மம்பட்டிக்கு புறப்பட்ட தனியார் பஸ்சில் சென்றார். ஒரு பையில், இருசக்கர வாகன கடனுக்கு தவணை நிலுவை தொகை கட்ட, 30,000 ரூபாய் வைத்திருந்தார். மொபைல் போனில் பேசியபடி அவர், பஸ்சில் இருந்து இறங்கி-விட்டார். வீட்டுக்கு சென்றபோது, பணப்பையை பஸ்சில் மறந்து வைத்துவிட்டது தெரிந்தது.பின் சென்று, பஸ்சின், 'சிசிடிவி' கேமராவை பார்த்தபோது, அதே பஸ்சில் பயணித்த ஒரு பெண்,  அந்த பையை எடுத்துச்-சென்றது பதிவாகி இருந்தது. வேல்
முருகன் புகார்படி, தம்மம்பட்டி போலீசார், அந்த பெண்ணை தேடுகின்றனர்.