/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மொபட்-லாரி மோதி பெண் உடல் நசுங்கி பலி
/
மொபட்-லாரி மோதி பெண் உடல் நசுங்கி பலி
ADDED : ஏப் 26, 2025 01:07 AM
திருச்செங்கோடு:மல்லசமுத்திரம், தளவாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல், 42, மனைவி ரேவதி, 38; தம்பதியர், நேற்று முன்தினம் இரவு, 'டி.வி.எஸ்., எக்ஸல்' மொபட்டில், திருச்செங்கோடு சென்றனர். பின், மீண்டும் தளவாம்பாளையத்திற்கு புறப்பட்டனர். எஸ்.என்.டி., சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த டிப்பர் லாரி, மொபட் மீது மோதியதில், நிலை தடுமாறி தம்பதியர் இருவரும் கீழே விழுந்தனர்.இதில், ரேவதி மீது டிப்பர் லாரி ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி பலியானார்.
பலத்த காயமடைந்த சக்திவேலை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்து குறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.