ADDED : ஜூலை 14, 2025 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, கோட்டப்பாளையம், திருவேங்கடபுரம் அருந்ததியர் தெருவை சேர்ந்த இளையராஜா மனைவி சுதா, 39; இவர் கடந்த, 11 இரவு வீட்டின் அருகே துணி துவைத்துவிட்டு, கொடியில் துணி காய வைத்துக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு புதரில் பதுங்கியிருந்த பாம்பு ஒன்று, சுதாவின் காலில் கடித்தது. மல்லசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்ற சுதா, மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, நேற்று காலை, 5:40 மணியளவில் இறந்தார். இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.