/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வாகனம் மோதி விபத்து பெண் உடல் சிதறி பலி
/
வாகனம் மோதி விபத்து பெண் உடல் சிதறி பலி
ADDED : செப் 29, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாகனம் மோதி விபத்து
பெண் உடல் சிதறி பலி
வெண்ணந்துார், செப். 29-
வெண்ணந்துார் அருகே, சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுப்பத்தான்புதுார் பிரிவு சாலை பகுதியில், நேற்று அதிகாலை, 70 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம், அந்த பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. தொடர்ந்து அந்த வழியாக சென்ற வாகனங்கள், உடல் மீது ஏறி இறங்கியதில் உருக்குலைந்து காணப்பட்டது. வெண்ணந்துார் போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.