/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காவிரி ஆற்றில் பெண் சடலமாக மீட்பு
/
காவிரி ஆற்றில் பெண் சடலமாக மீட்பு
ADDED : மே 23, 2025 01:55 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள பாலத்தின் கீழே, காவிரி ஆற்றில் பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நாமக்கல் - ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் வகையில், பள்ளிப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே உயர் மட்டம் பாலம் உள்ளது. நேற்று மதியம் பாலத்தின் கீழே, ஆற்றில் பெண் சடலம் மிதப்பதாக, வெப்படை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, ஆற்றில் மிதந்த பெண் சடலத்தை மீட்டனர்.இறந்த பெண்ணுக்கு, 60 வயது இருக்கும். பாலத்தின் மேல் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது ஆற்றில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி இறந்து போனாரா என, தெரியவில்லை.
சம்பவம் நடந்த இடம், ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்டதால், வெப்படை தீயணைப்பு வீரர்கள், கருங்கல்பாளையம் போலீசாரிடம் சடலத்தை ஒப்படைத்தனர்.

