/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரம் நகராட்சியை பெண்கள் முற்றுகை
/
ராசிபுரம் நகராட்சியை பெண்கள் முற்றுகை
ADDED : அக் 22, 2024 01:07 AM
ராசிபுரம் நகராட்சியை
பெண்கள் முற்றுகை
ராசிபுரம், அக். 22-
ராசிபுரம் நகராட்சியுடன், 6 ஊராட்சிகள் மற்றும் பிள்ளாநல்லுார் டவுன் பஞ்சாயத்துடன், 5 ஊராட்சிகளை இணைக்க கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இதனை கண்டித்து ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., என, 11 ஊராட்சி மன்ற தலைவர்கள் ராசிபுரம் நகராட்சி, டவுன் பஞ்சாயத்துடன் இணைக்கும் முடிவை ரத்து செய்யக்கோரி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் 11 ஊராட்சி மன்ற தலைவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நகராட்சியுடன் இணைக்கும் முடிவு ரத்து செய்யக்கோரி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஊராட்சிகளை இணைக்கும் முடிவை ரத்து செய்யக்கோரி மனு அளித்தனர்.