/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பொங்கல் வைக்க இடம் கேட்டு பெண்கள் கோரிக்கை போராட்டம்
/
பொங்கல் வைக்க இடம் கேட்டு பெண்கள் கோரிக்கை போராட்டம்
பொங்கல் வைக்க இடம் கேட்டு பெண்கள் கோரிக்கை போராட்டம்
பொங்கல் வைக்க இடம் கேட்டு பெண்கள் கோரிக்கை போராட்டம்
ADDED : ஏப் 29, 2025 02:10 AM
ராசிபுரம்:
ராசிபுரம்  அடுத்த பாச்சல் கிராமத்தில், முத்துக்குமரன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு திருவிழா அடுத்த வாரம் நடக்க உள்ளது. இந்நிலையில், பாவடி மைதானத்தில் பொங்கல் வைக்க மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதுகுறித்து, நாமக்கல் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அதில், பாவடி மைதானத்தில் யாரும் பொங்கல் வைக்க கூடாது; வேறு இடத்தில் பொங்கல் வைத்துக்கொள்ள வேண்டும் என, முடிவெடுக்கப்பட்டது. இதை, இரண்டு தரப்பினரும்
ஏற்றுக்கொண்டு சென்றனர்.
இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று பாச்சல் பாவடி மைதானத்தில் ஒன்றுகூடி, கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாவடி மைதானத்தில் எவ்வித பிரச்னையும் இன்றி பொங்கல் வைத்து திருவிழா கொண்டாடி வருகிறோம்.  தற்போது, பொங்கல் வைக்க கூடாது. பொங்கல் வைக்க  தடை செய்துள்ளதை திரும்ப பெற வேண்டும். மீண்டும் அதே இடத்தில் பொங்கல் வைக்க அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
அங்கு வந்த புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம்
பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

