/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உள்ளாட்சி அமைப்பில் வெற்றி பெற்று பெண்கள் அதிக அளவில் பணியாற்ற வேண்டும்
/
உள்ளாட்சி அமைப்பில் வெற்றி பெற்று பெண்கள் அதிக அளவில் பணியாற்ற வேண்டும்
உள்ளாட்சி அமைப்பில் வெற்றி பெற்று பெண்கள் அதிக அளவில் பணியாற்ற வேண்டும்
உள்ளாட்சி அமைப்பில் வெற்றி பெற்று பெண்கள் அதிக அளவில் பணியாற்ற வேண்டும்
ADDED : டிச 31, 2024 07:27 AM
ப.வேலுார் : ''பெண்கள் அதிகளவில் உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் நின்று வெற்றி பெற்று பணியாற்ற வேண்டும்,'' என, நாமக்கல் கலெக்டர் உமா பேசினார்.
நாமக்கல் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல், 2019ல், இரண்டு கட்டங்களாக நடந்தது. அதன்படி, 17 மாவட்ட பஞ்., உறுப்பினர்கள், 172 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 332 கிராம பஞ்., தலைவர்கள், 2,595 பஞ்., வார்டு உறுப்பினர்கள் என மொத்தம், 3,106 பதவிகளுக்கு, தேர்தல் நடந்தது. அதில், ப.வேலுார் தாலுகா, பரமத்தி ஒன்றியத்தில், குன்னமலை ஊராட்சியில், தலைவர் மற்றும் 9 வார்டு உறுப்பினர் பதவிக்கு நடந்த தேர்தலில், தலைவராக பூங்கொடி, வார்டு உறுப்பினர்களாக லட்சுமி, அம்பிகா, சத்யா, மோகனப்பிரியா, திலகா, கண்மணி, பூங்கொடி, லட்சுமி, முத்துலட்சுமி ஆகியோர் வெற்றி பெற்றனர். போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்த கிராம பஞ்.,ல், தலைவர் முதல், வார்டு உறுப்பினர் வரை வெற்றி பெற்றவர்கள் மற்றும் பஞ்., செயலாளர் பரிமளம் உள்பட அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பஞ்., அலுவலகத்தில், உள்ளாட்சி பிரதிநிதிகள், பணியாளர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல் கலெக்டர் உமா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அப்போது, அவர் பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்திலேயே, குன்னமலை பஞ்., தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பஞ்., செய லர் உட்பட அனைவரும் பெண்களாக உள்ளனர். இந்த பஞ்.,ல் அனைவரும் பெண்களாக தேர்ந்தெடுக்கப்பட்டது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்களை வீட்டில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்காத நிலையில், உள்ளாட்சி பதவிகளுக்கு பெண்களை நிறுத்தி அவர்களை வெற்றி பெற செய்திருப்பது பெருமையாக உள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவி காலம் முடிவுர நிலையில், அவர்களுடன் கலந்துரையாட வேண்டி உள்ளது. பெண்கள் அதிக அளவில் உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் நின்று வெற்றி பெற்று பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, பஞ்., தலைவர் பூங்கொடி உள்ளிட்ட அனைவரையும் கவுரவித்து, கேடயம் வழங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் வடிவேல், அட்மா தலைவர் தனராசு, ஒன்றிய சேர்மன் திலகவதி, துணைத்தலைவர் கருமண்ணன், அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.