/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மகளிர் உரிமைத்தொகை பெறாமல் விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
/
மகளிர் உரிமைத்தொகை பெறாமல் விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
மகளிர் உரிமைத்தொகை பெறாமல் விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
மகளிர் உரிமைத்தொகை பெறாமல் விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
ADDED : ஜூலை 09, 2025 01:43 AM
நாமக்கல், நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, சின்ன முதலைப்பட்டியில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்ட முகாம் தொடர்பாக, வீடு வீடாக சென்று விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் துர்காமூர்த்தி தலைமை வகித்தார். எம்.பி., மாதேஸ்வரன், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், பொதுமக்களுக்கு, 'உங்களுடன் ஸ்டாலின்' விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினார்.அப்போது அவர் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில், 238 சிறப்பு முகாம்கள் வரும், 15ல், தொடங்கி, செப்., 30 வரை, 40 நாட்கள் நடக்கிறது. முகாம் மூலம், மக்களுக்கு வழங்கப்படவுள்ள அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்கள், முகாம் நடக்கும் இடங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தற்போது மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகிறது.
மேலும் முகாம்களில், மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் யாராவது இருந்தால், முகாம் நடக்கும் நாளன்று சென்று விண்ணப்பத்தை அளிக்கலாம். மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பம், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.
இவ்வாறு கூறினார்.