/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மகளிர் விடியல் பயண பஸ் புதிய வழித்தடத்தில் தொடக்கம்
/
மகளிர் விடியல் பயண பஸ் புதிய வழித்தடத்தில் தொடக்கம்
மகளிர் விடியல் பயண பஸ் புதிய வழித்தடத்தில் தொடக்கம்
மகளிர் விடியல் பயண பஸ் புதிய வழித்தடத்தில் தொடக்கம்
ADDED : ஜூலை 20, 2025 07:53 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிபேட்டை ஒன்றியம், மங்களபுரம் ஊராட்சியில் இருந்து தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில், இரண்டு பஸ்கள் நேற்று புதிதாக இயக்கப்பட்டன. இப்பகுதி பெண்களின் நீண்ட நாள் கோரிக்கையான மங்களபுரத்தில் இருந்து சேலம் மாவட்டம், ஆத்துாருக்கு விடியல் பயண பஸ் கேட்டிருந்தனர். இதையடுத்து, நேற்று நடந்த விழாவில் அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., ராஜேஸ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தனர்.
அதேபோல், வாழப்பாடி-கம்மாளப்பட்டி செல்லும் எம்1 டவுன் பஸ்சை பள்ளி மாணவ, மாணவியர்களின் நலன் கருதி, காலை, மாலை வேளைகளில் நாவல்பட்டி காட்டூர் வழியாக நீட்டிப்பு செய்து வைத்தனர். இதில், முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி, தமிழக அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் மோகன்குமார், கோட்ட மேலாளர் செங்கோட்டு வேலவன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.