/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளிப்பாளையம் யூனியனில் ரூ 3.25 கோடியில் பணிகள் துவக்கம்
/
பள்ளிப்பாளையம் யூனியனில் ரூ 3.25 கோடியில் பணிகள் துவக்கம்
பள்ளிப்பாளையம் யூனியனில் ரூ 3.25 கோடியில் பணிகள் துவக்கம்
பள்ளிப்பாளையம் யூனியனில் ரூ 3.25 கோடியில் பணிகள் துவக்கம்
ADDED : ஜன 03, 2025 01:39 AM
பள்ளிப்பாளையம், ஜன. 3-
பள்ளிப்பாளையம் யூனியனில், ரூ.3.25 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி துவக்கி வைத்தார்.
பள்ளிப்பாளையம் யூனியனில் காடச்சநல்லுார், பாப்பம்பாளையம், கொக்கராயன்பேட்டை, ஓடப்பள்ளி, எலந்தகுட்டை, பாதரை, சமயசங்கிலி, களியனுார், தட்டாங்குட்டை உள்ளிட்ட பஞ்., பகுதியில் மேல்நிலை நீர் தொட்டி, குடிநீர் குழாய் விரிவுபடுத்தல், வடிகால் அமைத்தல், கான்கிரீட் தளம், சுகாதார வளாகம், தடுப்பணை, அங்கன்வாடி மையம், ரேஷன் கடை மற்றும் சாலை வசதி உள்ளிட்ட ரூ.3.25 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது. விழாவில் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
மேலும் முடிவுற்ற சுகாதார வளாகம், குடிநீ பணி, கூடுதல் பள்ளி வகுப்பறைகளை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் செந்தில் மற்றும் பஞ்., தலைவர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

