/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சீக்குப்பாறையில் வியூ பாயின்ட் அமைக்கும் பணி மும்முரம்
/
சீக்குப்பாறையில் வியூ பாயின்ட் அமைக்கும் பணி மும்முரம்
சீக்குப்பாறையில் வியூ பாயின்ட் அமைக்கும் பணி மும்முரம்
சீக்குப்பாறையில் வியூ பாயின்ட் அமைக்கும் பணி மும்முரம்
ADDED : நவ 29, 2024 07:37 AM
சேந்தமங்கலம்: கொல்லிமலை சீக்குப்பாறையில், 30 அடி உயரத்திற்கு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக வியூ பாயின்ட் அமைக்கும் பணி நடக்கிறது.
கொல்லிமலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர். இதனால், மலைப்பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் வகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு சீக்குப்பாறையில், 20 அடி உயரத்தில் வியூ பாயின்ட் அமைக்கப்பட்டது. இங்கு வரும் சுற்றுலா பயனிகள் வியூ பாயின்டில் ஏரி மலையின் இயற்கை அழகை ரசிக்கும் நிலை யில், மேலும், சுற்றுலா பயனிகளை கவரும் வகையில், தற்போது 30 அடி உயரத்தில், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக பிரம்மாண் டமான அளவில் வியூ பாயின்ட் அமைக்கும் பணி கடந்த ஆறு மாதங்களாக நடக்கிறது.
வியூ பாயின்ட் பயன்பாட்டிற்கு வந்தால், சுற்றுலா பயணிகள் மலையின் அழகை ரசிப்பதுடன், இங்கு அடிக்கடி வரும் மேக கூட்டங்களை பார்த்து, உற்சாகமடைவர் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.