/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.40 கோடியில் ரெட்டிப்பட்டி-எருமப்பட்டி வரை இருவழி சாலையை அகலப்படுத்தும் பணி சுறுசுறு
/
ரூ.40 கோடியில் ரெட்டிப்பட்டி-எருமப்பட்டி வரை இருவழி சாலையை அகலப்படுத்தும் பணி சுறுசுறு
ரூ.40 கோடியில் ரெட்டிப்பட்டி-எருமப்பட்டி வரை இருவழி சாலையை அகலப்படுத்தும் பணி சுறுசுறு
ரூ.40 கோடியில் ரெட்டிப்பட்டி-எருமப்பட்டி வரை இருவழி சாலையை அகலப்படுத்தும் பணி சுறுசுறு
ADDED : ஜூலை 03, 2025 01:44 AM
நாமக்கல், 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ், 40 கோடி ரூபாய் மதிப்பில், ரெட்டிப்பட்டி முதல், எருமப்பட்டி வரை இருவழி சாலையாக அகலப்படுத்தும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாமக்கல் நகரில் இருந்து, திருச்சி, மோகனுார், ப.வேலுார், திருச்செங்கோடு, சேலம் போன்ற பகுதிகளுக்கு அதிகளவில் வாகனங்கள் சென்று வருவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, நாமக்கல் - மோகனுார், நாமக்கல் -திருச்செங்கோடு, நாமக்கல் - திருச்சி, நாமக்கல் - பரமத்தி சாலை இருவழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.
அதேபோல், நாமக்கல் - துறையூர் சாலையில், பள்ளி, கல்லுாரிகள், செங்கல் சூளை நிறுவனங்கள், தனியார் ஆலைகள் அமைந்துள்ளன. அதனால், நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதுடன், நெரிசல் ஏற்பட்டு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், இச்சாலை குறுகலாக உள்ளதால், வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு, சாலையை அகலப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ், நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை விரிவாக்கம் செய்ய அனுமதி பெறப்பட்டது. தொடர்ந்து, ரெட்டிப்பட்டி முதல், எருமப்பட்டி வரை, 9.20 கி.மீ., துாரம் உள்ள சாலையில், இருவழி சாலையாக அகலப்படுத்த, 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது, இரு வழிசாலையாக அகலப்படுத்தும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பகுதியில், தடுப்பு சுவர் மற்றும் சிறுபாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், துாசூர் கடகால் பகுதியில் உள்ள பழைய தாம்போக்கி பாலத்திற்கு மாற்றாக, உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 'இந்த பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும்போது, போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்' என்பதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.