/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலையில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியும் பணி
/
கொல்லிமலையில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியும் பணி
கொல்லிமலையில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியும் பணி
கொல்லிமலையில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியும் பணி
ADDED : அக் 31, 2025 12:47 AM
சேந்தமங்கலம், :கொல்லிமலை வட்டாரத்தில், பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியும் பணி நடந்து வருகிறது.
பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் பள்ளிக்கு நீண்ட நாட்கள் வராமல் இருக்கும் மாணவர்களை கண்டுபிடித்து, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஷ்வரி தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
கொல்லிமலை வட்டாரத்தில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பச்சமுத்து தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு குழு, கடந்த இரண்டு நாட்களாக பள்ளிக்கு செல்லா குழந்தைகள் மற்றும் நீண்ட நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்த இரண்டு மாணவர்களை கண்டறிந்து, அவர்களது வீட்டிற்கு சென்று, பெற்றோருக்கு கல்வியின் அவசியம் மற்றும் தமிழக அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி, மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தனர்.