/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உணவு வினியோகிக்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் இணைக்கும் பணி தீவிரம்
/
உணவு வினியோகிக்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் இணைக்கும் பணி தீவிரம்
உணவு வினியோகிக்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் இணைக்கும் பணி தீவிரம்
உணவு வினியோகிக்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் இணைக்கும் பணி தீவிரம்
ADDED : ஜன 06, 2025 02:06 AM
நாமக்கல்: நாமக்கல்லில் உணவு வினியோகம் செய்யும் தொழிலாளர்கள், நலவாரியத்தில் இணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழக உடலுழைப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாது-காக்கும் வகையில், உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்-டுள்ள தொழிலாளர்களை, நலவாரியத்தில் பதிவு செய்வதற்கான பணி, அவர்கள் குறித்த கணக்கெடுப்பு தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) இந்தியா மற்றும் அலுவலர்கள் இதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
உதவி ஆணையர் அலுவலகத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கி-ழமை காலை, 10:00 மணி முதல், 12:00 மணி வரை நலவா-ரிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடந்து வருகிறது. 19 வயது முதல், 59 வயது வரை உள்ள தொழிலாளர்கள் உறுப்பினர்-களாக தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வரும்போது வயதிற்கான ஆவணம் (ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, பள்ளி மதிப்பெண் சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று) ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், போட்டோ, நியமனதாரருக்-கான ஏதேனும் ஒரு அடையாள அட்டை மற்றும் தொழிலா-ளர்கள் பணிபுரியும் அடையாள அட்டை ஆகிய அசல் ஆவணங்-களுடன் அலுவலகத்திற்கு நேரில் வந்து உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம்.
நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் இத-வரை, 26 முகாம்கள் நடைபெற்று, 89 தொழிலாளிகள் உறுப்பி-னர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல்லில் உணவு வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்-டுள்ள, 127 பேர் நலவாரியத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக அதி-காரிகள்
தெரிவித்தனர்.