/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பெற்றோர் போராட்டத்தால் பள்ளியில் 'பேவர் பிளாக்' பதிக்கும் பணி தீவிரம்
/
பெற்றோர் போராட்டத்தால் பள்ளியில் 'பேவர் பிளாக்' பதிக்கும் பணி தீவிரம்
பெற்றோர் போராட்டத்தால் பள்ளியில் 'பேவர் பிளாக்' பதிக்கும் பணி தீவிரம்
பெற்றோர் போராட்டத்தால் பள்ளியில் 'பேவர் பிளாக்' பதிக்கும் பணி தீவிரம்
ADDED : பிப் 05, 2025 07:15 AM
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் யூனியன், மணலி ஜேடர்பாளையத்தில், பஞ்., தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு, சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 174 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளி தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால், இரண்டு மாதங்களுக்கு முன் பெய்த மழையின்போது, பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் புகுந்தது. மேலும், பள்ளியை சுற்றிலும் கழிவுநீர் தேங்கியது. இதனால், மாணவர்கள் அடிக்கடி வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டனர். தினமும், 40 முதல், 50 மாணவர்கள் நோயால் பாதிக்கப்பட்டு பள்ளிக்கு வரமுடியாத சூழல் உருவானது. இதற்கிடையே, இரண்டு மாதங்களுக்கு முன் கலெக்டர் உமா ஆய்வு செய்து, 'பேவர் பிளாக்' கற்கள் பதிக்க உத்தரவிட்டார். ஆனால், எந்த பணியும் தொடங்கவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் சமரசம் செய்தனர். தொடர்ந்து, பள்ளியை சுற்றி தேங்கியிருந்த கழிவுநீர் அகற்றப்பட்டு, பிளீச்சிங் பவுடர் துாவப்பட்டது. மேலும், பள்ளி வளாகத்திற்குள் மண்ணை கொட்டி, 'பேவர் பிளாக்' கற்கள் பதிக்கும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது. இதனால், நேற்று வழக்கம் போல் மாணவ, மாணவியர் பள்ளிக்கு வருகை தந்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் பச்சமுத்து (தொடக்க கல்வி) ஆகியோர் ஆய்வு செய்தனர். பி.டி.ஓ.,க்கள் லோகமணிகண்டன், தனம் ஆகியோர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.