/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு பஸ் கண்ணாடியை உடைத்த தொழிலாளி கைது
/
அரசு பஸ் கண்ணாடியை உடைத்த தொழிலாளி கைது
ADDED : அக் 13, 2024 08:44 AM
பள்ளிப்பாளையம்: சேலம், தாதகப்பட்டியை சேர்ந்தவர் பூபதிராஜா, 32; வெள்ளிப்பட்டறை தொழிலாளி. இவர், நேற்று முனதினம் இரவு, பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த படவீடு ஐ.சி.எல்., பஸ் ஸ்டாப்பில் சேலம் செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார்.
பவானியில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ்சில் ஏறி, முன்பகுதியில் உள்ள சீட்டில் அமர்ந்தார்.
அப்போது அரசு பஸ் டிரைவர் பழனிசாமி, இந்த, 'சீட்' பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. பின்னாடி சென்று
அமருங்கள்' என, தெரிவித்துள்ளார். இதனால், பூபதிராஜா டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆத்திரமடைந்த பூபதிராஜா, கையால் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்தார். இதுகுறித்து,
வெப்படை போலீசுக்கு டிரைவர் தகவல் தெரிவித்தார். அங்கு சென்ற போலீசார், பூபதிராஜாவை கைது
செய்தனர்.