/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தீர்ப்புக்கு பயந்து தொழிலாளி தற்கொலை
/
தீர்ப்புக்கு பயந்து தொழிலாளி தற்கொலை
ADDED : ஆக 11, 2025 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், ராமாபுரம் புதுாரைச் சேர்ந்தவர் சீனிவாசன், 32; தச்சு தொழிலாளி. நேற்று வீட்டு படுக்கை அறையில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல்லைச்சேர்ந்த பிரபல ரவுடி காசியை, 2018ல் ஒன்பது பேர் கும்பல், வெட்டி கொலை செய்ய முயன்றது. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட எட்டாவது நபரான சீனிவாசனுக்கு, நாமக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு அளிக்கப்படவிருந்த நிலையில் சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.