ADDED : ஆக 08, 2026 05:21 AM
அ நிறம் | அளவு
வெண்ணந்துார்:வெண்ணந்துார்
அடுத்த அத்தனுார் அருகே, காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர்
பழனியப்பன் மகன் பெரியசாமி, 51; மரம் ஏறும் தொழிலாளி. இவர், நேற்று
காலை, அத்தனுார் புதுாரை சேர்ந்த லட்சுமணன், 45, என்பவரது வீட்டில்
உள்ள தென்னை மரத்தில் தேங்காய்களை பறித்துவிட்டு, சாலையோரத்தில்
உயரமாக வளர்ந்திருந்த தேக்கு மரத்தை வெட்டும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது,
மரத்தின் அருகே சென்றிருந்த உயர் அழுத்த மின் கம்பி மீது எதிர்பாராத
விதமாக தேக்கு மரம் சாய்ந்தது. இதில் மின்சாரம் தாக்கி பெரியசாமி
சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெண்ணந்துார் போலீசார் விசாரித்து
வருகின்றனர்.
