/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலையோர மைல் கல் மீது பைக் மோதி தொழிலாளி பலி
/
சாலையோர மைல் கல் மீது பைக் மோதி தொழிலாளி பலி
ADDED : ஜூலை 20, 2025 07:48 AM
மோகனுார்: திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கருத்தகோட்டுப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார், 33. கூலி தொழிலாளியான அவர், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, மோகனுாரில் இருந்து வளையப்பட்டி சாலையில், 'பஜாஜ் பிளாட்டினா' பைக்கில் சென்றார். பைக்கை விஜயகுமார் ஓட்டினார். உடன் நண்பர் பாபுவை அழைத்து சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோரம் உள்ள மைல் கல் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில், படுகாயமடைந்தவர்களை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு விஜயகுமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.