/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டூவீலர்கள் மோதிய விபத்தில் தொழிலாளி படுகாயம்
/
டூவீலர்கள் மோதிய விபத்தில் தொழிலாளி படுகாயம்
ADDED : மார் 01, 2024 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: பெருந்துறை அருகே ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதியில் வசிப்பவர் ஜெயராமன், 46. கூலித்தொழிலாளி. கடந்த, 21ல் ஹீரோ ஹோண்டா பைக்கில் மாலை, 5:00 மணியளவில் பள்ளிபாளையம் சாலை சீராம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிரில் வந்த பஜாஜ் பல்சர் பைக் ஓட்டுனர் வேகமாக வந்து, இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றார். இதில் ஜெயராமன் பலத்த காயமடைந்தார். பவானி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான நபர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

