ADDED : மே 27, 2026 04:11 AM
அ நிறம் | அளவு
குமாரபாளையம்:குமாரபாளையம் டேன் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் கிருஷ்ணராம், 40; பீஹார் மாநிலத்தை சேர்ந்த இவர், அதே நிறுவனம் அருகே லைன் வீட்டில் தங்கி, பணியாற்றி வருகிறார்.
இவர், நேற்று முன்தினம் மாலை, 1:00 மணிக்கு, பல்லக்காபாளையம் வாரச்சந்தையில், வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிக்கொண்டு, சாந்தி பகுதியில் சாலையை நடந்தபடி கடக்க முயன்றார். அப்போது, அங்கு வேகமாக வந்த, 'மில்கி மிஸ்ட்' என்ற வேன், இவர் மார்பு மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
