/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி உயிரிழப்பு
/
சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி உயிரிழப்பு
ADDED : ஜூலை 30, 2025 01:36 AM
பள்ளிப்பாளையம்,  சேலம் அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த இறைமங்கலத்தை சேர்ந்த தொழிலாளி பலியானார்.பள்ளிப்பாளையம் அருகே இறையமங்கலத்தை சேர்ந்த பிரகாஷ், 30,  கூலி தொழிலாளி. திருமணமாகவில்லை, இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த 20ம் தேதி இறையமங்கலம் பகுதியில் சாலையில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒருவர் டூவீலரில் வந்துள்ளார். அவரிடம் பிரகாஷ் லிப்ட் கேட்டு ஏறியுள்ளார். அப்போது பிரகாஷ்  மயங்கி கீழே விழுந்தார். சேலம் அரசு மருத்துவமனையில், தொடர் சிகிச்சையில் இருந்த பிரகாஷ் நேற்று முன்தினம் இரவு இறந்தார். இது குறித்து, மொளசி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

