/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொலை வழக்கில் போலீசார் தேடிய தொழிலாளி தற்கொலை முயற்சி
/
கொலை வழக்கில் போலீசார் தேடிய தொழிலாளி தற்கொலை முயற்சி
கொலை வழக்கில் போலீசார் தேடிய தொழிலாளி தற்கொலை முயற்சி
கொலை வழக்கில் போலீசார் தேடிய தொழிலாளி தற்கொலை முயற்சி
ADDED : ஏப் 14, 2025 06:49 AM
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பிள்ளாசெட்டி தெருவை சேர்ந்தவர் சுந்தரராஜன், 35; குடிப்பழக்கம் உள்ளவர். இவரது வீட்டருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன், 50; இருவருக்கும் பொதுச்சுவர் தொடர்பாக பிரச்னை இருந்தது. இதற்கு, சவுண்டம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுந்தரம் மகன் கார்த்திகேயன், 42, சமாதானம் பேசினார். ஒரு சமயத்தில் சுந்தரராஜன், 'தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கும் ராதாகிருஷ்ணனை கொலை செய்யப்போகிறேன்' என, கார்த்திகேயனிடம் கூறியுள்ளார்.
இதை, கார்த்திகேயன், ராதாகிருஷ்ணனிடம் கூறி, 'ஜாக்கிரதையாக இரு' என, எச்சரித்துள்ளார். ஆனால், இதுகுறித்து ராதாகிருஷ்ணன், சுந்தரராஜனிடமே கேட்டு மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால், சுந்தரராஜனுக்கு, கார்த்திகேயன் மீது கோபம் திரும்பியது. இந்நிலையில் சிங்களாந்தபுரத்தில் காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது. கடந்த, 11 இரவு, 10:00 மணிக்கு கோவில் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு, கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சுந்தரராஜன், தான் மறைத்து வைத்திருந்த ஆடு அறுக்கும் கத்தியால் கார்த்திகேயன் நெஞ்சில் குத்தினார். கீழே சரிந்த கார்த்திகேயனை விடாமல், அவரது கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதுகுறித்து, பேளுக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து சுந்தரராஜனை தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று மல்லசமுத்திரம் பகுதியில் சுற்றிய சுந்தரராஜன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் மீட்டு, நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தகவலறிந்து வந்த பேளுக்குறிச்சி போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.