தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/தேர்தல் முடிந்து வேலைக்கு திரும்பிய தொழிலாளர்கள்

தேர்தல் முடிந்து வேலைக்கு திரும்பிய தொழிலாளர்கள்

தேர்தல் முடிந்து வேலைக்கு திரும்பிய தொழிலாளர்கள்


ADDED : ஏப் 27, 2026 04:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 04:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிப்பாளையம்:குமாரபாளையம் தொகுதியில் தேர்தல் வேலையில் ஈடுபட்ட விசைத்தறி தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பினர்.

குமாரபாளையம் தொகுதியில் பெரும்பாலானோர் விசைத்தறி, சாய ஆலை தொழிலாளர்கள் உள்ளனர். சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், பலரும் தேர்தல் பணிக்கு சென்றுவிட்டனர். மேலும், தலைவர்கள், வேட்பாளர் வருகையின் போதும், தேர்தல் பிரசார கூட்டங்களிலும் பிரமாண்டம் காட்ட, அரசியல் கட்சியினர் அதிகளவு ஆட்களை திரட்டுவது வழக்கம். பிரதான கட்சிகள் ஆள் திரட்டுவதில் தீவிரம் காட்டினர்.

இதனால், பிரசாரம் மற்றும் தலைவர் வருகையின்போது, தொழிலாளர்களையும் கூட்டிச்சென்று விட்டனர். இதனால், 70 சதவீதம் பேர் வேலைக்கு செல்லாமல் தேர்தல் பணியில் ஈடுபட்டதால், விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டது. தற்போது தேர்தல் நடந்து முடிந்துவிட்டதால், தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல துவங்கிவிட்டனர். விசைத்தறி தற்போது, இரவு, பகல் என, இரண்டு ஷிப்ட்டில் செயல்படுவதால், சரிவு நிலையில் இருந்த விசைத்தறி தொழில், இயல்பு நிலைக்கு திரும்பியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us